ஹரியானாவில் சில மாதங்களுக்கு முன்பு பொதுத்தேர்தல் நடைபெற்றது. எதிர்பார்க்காத வெற்றியை பெறுவோம் என்று கூறிய பாஜகவுக்கு தேர்தல் முடிவுகள் சற்று அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் கொடுத்தது. மிக பெரிய வெற்றி பெறுவோம் என்று மார்தட்டிய பாஜக மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 40 தொகுதிகளில் மட்டுமே வென்றது. தோல்வி அடையும் என்று எதிர்பார்த்த காங்கிரஸ் கட்சி, அக்கட்சியினரே எதிர்பார்க்காத வகையில் 30 இடங்களில் வென்று பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. மெஜாரிட்டி யாருக்கும் கிடைக்காத நிலையில், ஜனநாயக ஜனதா கட்சியின் 10 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவோடு பாஜக ஆட்சி அமைத்தது.
இந்நிலையில் நடந்து முடிந்த ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 41 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளதாக தற்போது தெரிய வந்துள்ளது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவில் உள்ள 30 சட்டமன்ற உறுப்பினர்களில் ஏக்களில் 17 பேர் மீது கிரிமினல் வழக்கு உள்ளது. காங்கிரசின், 16 சட்டமன்ற உறுப்பினர்களில் 8 பேர் மீதும் கிரிமினல் வழக்குகள் உள்ளதாக கூறப்படுகின்றது. பாஜகவின், 25 சட்டமன்ற உறுப்பினர்களில் 11பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற அம்மாநில தேர்தலில் 55 எம்.எல்.ஏக்கள் மீது கிரிமினல் வழக்குகுகள் நிலுவையில் இருந்தது.