Published on 20/03/2020 | Edited on 20/03/2020
சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்து தற்போது உலகம் முழுவதும் சுமார் 173 நாடுகளில் பரவியுள்ள கரோனாவால் 2.21 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதனால் பலியானோர் எண்ணிக்கை 9000 ஐ கடந்துள்ளது. இந்த வைரஸால் இந்தியாவில் 223 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. இந்த வைரஸை கட்டுப்படுத்த உலகநாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.
கரோனா வைரஸ் உலக அளவில் பொருளாதாரத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கரோனா பாதிப்பு எதிரொலியாக சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் வங்கிக் கடனை திரும்ப செலுத்த அவகாசம் வழங்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.