Skip to main content

சென்னை ஐ.ஐ.டிக்கு முதலிடம்...!

Published on 04/04/2018 | Edited on 04/04/2018

இந்திய அளவில் சிறந்த பொறியியல் கல்லூரிகள் தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி முதல் இடம் பிடித்துள்ளது.

 

IIT

 

மேலும்  இந்திய அளவிலான ஒட்டுமொத்த கல்லூரிகளின் தரவரிசை பட்டியலில் பெங்களூரு ஐ.ஐ.எஸ்.சி கல்லூரி முதலிடத்தை பிடித்துள்ளது. சென்னை ஐஐடி இரண்டாவது இடத்திலும், அண்ணா பல்கலைக்கழகம் பத்தாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் பிரபல கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
chennai mit college issue

சென்னை குரோம்பேட்டையில் எம்.ஐ.டி. (M.I.T.) என்ற பெயரில் பிரபல பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் கல்லூரிக்கு இன்று (06.03.2024) மாலை மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கல்லூரி நிர்வாகத்தினர் சார்பில் இது குறித்து சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். மேலும் சென்னை காவல்துறையின் சார்பில் மோப்ப நாயை கொண்டும் சோதனை மேற்கொண்டுள்ளனர். பிரபல கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாகச் சென்னையில் உள்ள தமிழ்நாடு தலைமைச் செயலகம் மற்றும் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதும், இன்று காலை சென்னையில் உள்ள கோயில்களில் வெடிகுண்டு வெடிக்கும் என பெங்களூரு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

Next Story

பொதுத்தேர்வு தொடங்கும் முன்னரே மாவட்டக் கல்வி அலுவலர் சஸ்பெண்ட்

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
District Education Officer suspended before public examination

2023 - 24 ஆம் கல்வியாண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 1 ஆம் தேதி (01.03.2024) தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3 ஆயிரத்து 302 மையங்களில் 4.13 லட்சம் மாணவியர், 3.58 லட்சம் மாணவர்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 7.72 லட்சம் பேர் தேர்வெழுத உள்ளனர். இதில் 21 ஆயிரத்து 875 தனித்தேர்வர்கள், 125 சிறைவாசிகளும் அடங்குவர்.

மேலும் பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் சுமார் 47 ஆயிரம் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். தேர்வில் முறைகேடுகளைத் தடுக்க 4 ஆயிரத்து 200 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதோடு மாவட்ட ஆட்சியர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்

திட்டமிட்டபடி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்வுகள் இன்று தொடங்கியுள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே கல்வித்துறையில் இருக்கக்கூடிய அலுவலர்களுக்கு ஆயத்தப் பணிகளுக்கான அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டிருந்தது. தேர்வு செயல்பாடுகளில் சுணக்கமிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் நேசபிரபாவை சஸ்பெண்ட் செய்து இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. முறையான பொதுத்தேர்வு கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யாமல் சுணக்கம் காட்டியதால் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு தொடங்குவதற்கு முன்பே மாவட்ட கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்படுவது இதுவே முதல்முறை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.