இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதேபோல் இந்தியாவில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டுமே தற்போது தடுப்பூசி செலுத்தப்படும் நிலையில் 12 முதல் 18 வயதிற்குக் கீழ் உள்ளோருக்கான கரோனா தடுப்பூசிக்கு மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசியை 12 முதல் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை 2 வயதிலிருந்து 8 வயது, 8லிருந்து 14, 12லிருந்து 18 என்று பல்வேறு பிரிவுகளாகப் பிரித்து குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்துவது தொடர்பான பரிசோதனைகள் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு முக்கிய மருத்துவமனைகளில் கடந்த ஆறு மாதங்களாக நடத்தப்பட்ட வந்த நிலையில், மற்ற தடுப்பூசிகளை விட கோவாக்சின் குழந்தைகளுக்கு மிகக்குறைந்த பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது, நல்ல பலனை அளிப்பதாக முடிவுகள் வந்திருந்தது. இந்நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.