நாடு முழுவதும் மீண்டும் கரோனா பாதிப்பு என்பது அதிகரித்து வரும் நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களைத் தீவிரமாக கண்காணிக்க மத்திய அரசு மாநிலங்களுக்கு உத்தரவு ஒன்றை வழங்கியுள்ளது. அதேபோல் கட்டுப்பாட்டு மையங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகளை விரைவில் உருவாக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை செயலாளர் சார்பாக அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்த கடிதத்தில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட சேவைகளை உடனடியாக அதிகரிக்க வேண்டும், குறிப்பாகப் பரிசோதனைகளை அதிகரிப்பதற்கான கட்டமைப்புகளை உருவாக்கி வைக்க வேண்டும், பொதுமக்கள் எளிதாக கரோனா விவகாரத்தில் மருத்துவமனைகளை அணுகும் வகையில் வெளிப்படைத்தன்மை உடைய கட்டமைப்புகளை உருவாக்குங்கள். தற்காலிகமான மருத்துவமனைகளை உருவாக்குங்கள், வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டவர்களை உரிய முறையில் தீவிரமாகக் கண்காணிக்க தனியாக ஒரு குழுவை உருவாக்க வேண்டும் என அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.
நேற்று தமிழகத்தில் ஜனவரி 10 ஆம் தேதி வரை புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.