Published on 16/07/2021 | Edited on 16/07/2021
![rahul gandhi](http://image.nakkheeran.in/cdn/farfuture/w_bUW3wQFnIDF7e00AwMNoCl7JBiXodzO8lMTM9GBUI/1626435376/sites/default/files/inline-images/dasv.jpg)
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இன்று அக்கட்சின் சமூக ஊடக ஆர்வலர்களுடன் காணொளி வாயிலாக இன்று உரையாடினார். அப்போதும் அவர், பாஜகவை பார்த்து பயப்படுபவர்களே அக்கட்சியில் இணைவாதாக குறிப்பிட்டார். மேலும் பயப்படுவார்கள் நமக்கு தேவையில்லை எனவும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி, "பயமற்ற பலர் காங்கிரஸில் இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களை காங்கிரஸுக்குள் கொண்டு வரவேண்டும். பாஜகவை பார்த்து பயப்படும் காங்கிரஸ்காரர்களை வெளியேற்ற வேண்டும். ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை நம்புபவர்கள் நமக்கு தேவையில்லை. நமக்கு அச்சமற்ற மக்கள் தேவை" என கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைமை, கட்சிக்குள் அதிரடி மாற்றங்களை செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ராகுல் காந்தி இவ்வாறு பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது
.