Published on 04/05/2023 | Edited on 04/05/2023
இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா மாநகராட்சிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை தேர்தல் நடைபெற்றது. சிம்லா மாநகராட்சியில் மொத்தம் 34 வார்டுகள் உள்ள நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் 59 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
இந்நிலையில் இன்று பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 5 சுற்றுகளாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ஆளும் காங்கிரஸ் கட்சியானது 24 இடங்களிலும், பா.ஜ.க. 9 இடங்களிலும், சி.பி.ஐ.(எம்.) 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக பாஜகவிடம் இருந்த சிம்லா மாநகராட்சியை இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.