மத்திய அரசு சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி, வயநாடு மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோருக்கு அளிக்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி பாதுகாப்பை வாபஸ் பெற்றது.
மேலும் அவர்களுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என தெரிவித்தது. ஆனால் இதை ஏற்காத சோனியா காந்தி, மன்மோகன் சிங், ஆனந்த் சர்மா ஆகியோர் எஸ்.பி.ஜி பாதுகாப்பை கோரி மீண்டும் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய பாஜக கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, விடுதலைப்புலிகள் (LTTE)அமைப்பு தற்போது இல்லாததால் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்திக்கு எஸ்.பி.ஜி பாதுகாப்பு தேவையில்லை என்று பேசினார்.
இதனிடையே மாநிலங்களவையில் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் செயல் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜே.பி நட்டா, யாருக்கு எந்த அளவு அச்சுறுத்தல் உள்ளது என்பதன் அடிப்படையில் பாதுகாப்பு முடிவு செய்யப்படுகிறது. அரசியல் தலைவர்கள் பாதுகாப்பு விஷயத்தில் எந்த விதமான அரசியலும் இல்லை என்று உறுதிபட தெரிவித்தார்.