Published on 08/06/2018 | Edited on 08/06/2018
முன்னாள் குடியரசு தலைவரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பிரணாப் முகர்ஜிக்கு கடந்த சில நாட்களாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்களும், அவருடைய சொந்த மகளுமே விமர்சித்து கண்டனம் தெரிவித்து வந்தனர். அவர்கள் கண்டனம் தெரிவிக்க காரணம், பிரணாப் முகர்ஜி ஆர் எஸ் எஸ் நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக செய்தி வெளியிடப்பட்ட பின் பலர் விமர்சித்தனர். பிரணாப் பாஜகவுடன் இணைந்துவிடுவார் என்றெல்லாம் கூறினார்கள்.
நேற்று நாக்பூரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மாலை ஐந்து மணியளவில் பிரணாப் முகர்ஜி கலந்துகொண்டார். அதில் அவர் பேசியபோது, இந்தியாவின் சிறப்பே வேற்றுமையில் ஒற்றுமையும், பன்முகத்தன்மையும் தான். மேலும், இந்தியாவை மதம் மற்றும் சகிப்பின்மைக்குள் வரையறுத்தால் இந்தியா அடையாளம் இல்லாமல் போய்விடும் என்று எச்சரித்துள்ளார். சகிப்புத்தன்மையால் நாம் வலிமை பெற்றிருக்கிறோம். பன்முகத்தன்மையை மதிப்பதும், வேற்றுமையில் ஒற்றுமையை கொண்டாடுவதும் நமது கவுரவம் என்றும் அதில் கூறியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் ஏன் கலந்துகொள்கிறேன் என்பதற்கான விளக்கத்தை மேடையில் பேசும் தருவாயில் தெரிவிப்பேன் என்றவர் அதேபோல தெரிவித்தார். பாரத நாடு மற்றும் தேசியம், தேசபக்தி பற்றிய எனது புரிதலுக்காகவே இந்த விழாவில் கலந்துகொண்டேன் என்று கண்டனம் தெரிவித்த அனைவருக்கும் விளக்கமளித்துள்ளார். மக்கள் கலவரங்களற்று சுதந்திரமாக வாழ்வதை உறுதிப்படுத்துதல் அவசியம் என்றும் தெரிவித்துள்ளார். ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் இவருக்கு முன்பு பேசியபோது. பிரணாப் முகர்ஜியை இந்த விழாவில் கலந்துகொள்வதை குறித்து கண்டம் தெரிவித்தது எல்லாம் ஏற்புடையது அல்ல. இந்தியர்கள் யாரும் வெளியாட்கள் இல்லை என்பது எங்கள் அமைப்பின் குறிக்கோள் என்று பகவத் கூறியுள்ளார்.