உச்சநீதிமன்ற தீர்ப்பை மாநில மொழிகளில் மொழிபெயர்க்க 6 பேர் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது.
அண்மையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட்., உச்சநீதிமன்றம் தொடர்பான தகவல்கள் அனைவருக்கும் கிடைக்க தொழில்நுட்பம் உதவும். அதன் முதற்கட்டமாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டு வருவதாகக் கூறியிருந்தார். இதனைப் பாராட்டிய பிரதமர் மோடி, நீதிபதி சந்திரசூட் கூறியது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மாநில மொழிகளில் மொழிபெயர்க்க 6 பேர் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.எஸ்.ஓகா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழு முதற்கட்டமாக உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தமிழ், இந்தி, குஜராத்தி, ஒடியா ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட உள்ளன.