![amarinder singh](http://image.nakkheeran.in/cdn/farfuture/bJvqBRCt4rDmFkYTGQfBpuzC5zqTT8EjC0_4uHWT78k/1631957689/sites/default/files/inline-images/evewf2.jpg)
பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில், அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸில் உட்கட்சி பூசல் உச்சத்தை எட்டியுள்ளது. அண்மையில் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும், அமரீந்தர் சிங்கிற்கும் இடையே நடைபெற்று வந்த மோதலை நிறுத்த சித்து பஞ்சாப் மாநில காங்கிரஸின் தலைவராக்கப்பட்டார்.
இருப்பினும் கட்சியில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல் தீரவில்லை. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களில் ஒரு தரப்பினர் முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். அவரை முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்திவருகின்றனர். இதனையடுத்து காங்கிரஸ் மத்திய தலைமை, காங்கிரஸ் சட்டமன்றக் குழு கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த சட்டமன்றக் குழு கூட்டம் ஐந்து மணிக்கு நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் மேலிடம் அமரீந்தர் சிங்கை இராஜினாமா செய்யுமாறு கூறியதாகவும், அதற்கு, தன்னை பதவி விலகச் சொன்னால் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிவிடுவேன் என அமரீந்தர் சிங் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே அமரீந்தர் சிங், தனக்கு விசுவாசமான எம்.எல்.ஏக்களை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.