அமெரிக்கா ஆன்லைன் வர்த்தக ஜாம்பவானான அமேசானும் இந்திய நிறுவனமான சமரா கேபிட்டலும் இணைந்து ஆதித்யா பிரில்லா குழுமத்தின் சில்லறை வர்த்தகப் பிரிவை 42 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கப்போவதாக அறிவிப்பு வந்துள்ளது. இதில் 51% பங்குகளை சமரா நிறுவனமும் மீதமுள்ள பங்குகளை அமேசான் நிறுவனமும் வைத்திருக்கும் என்று அறிவிப்பும் வந்துள்ளது. தொடர்ந்து வால்மார்ட் நிறுவனத்துக்கும் அமேசான் நிறுவனத்துக்கும் யார் சந்தையில் முதல் இடம் என்ற போட்டி நிலவி வருகிறது. அதன் ஒரு முக்கிய நிகழ்வாக சில மாதங்களுக்கு முன்தான் சில்லறை வர்த்தகத்தின் மாபெரும் நிறுவனமான வால்மார்ட் இந்திய ஆன்லைன் நிறுவனமான ஃப்ளிப்கார்ட்டை 16 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு கையகப்படுத்தியது. இந்த நிலையில் ஆதித்யா குழுமத்தின் சில்லறை பிரிவை அமேசான் காயகப்படுத்தப் போவதாவாக அறிவிப்பு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.