கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டம் இண்டி தாலுகாவிற்கு உட்பட்ட லச்சியான் என்ற கிராமத்தில் விவசாயத்திற்கு 30 அடி ஆழ ஆழ்துளை கிணறு ஒன்று தோண்டப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆழ்துளை கிணற்றின் மூடாமல் இருந்துள்ளது. இந்நிலையில் தான் சுமார் 1.5 வயது குழந்தை ஒன்று இந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துள்ளது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் குழந்தையை ஆழ்துளைக் கிணற்றில் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குழந்தைக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ள நிலையில் அவரை உயிருடன் மீட்கப்பட பொதுமக்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். குழந்தையை மீட்கும் பணி சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
அதே சமயம் மருத்துவக் குழுவும், ஆம்புலன்ஸ் வாகனமும் சம்பவ இடத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் வெளியான முதற்கட்ட தகவலின் படி, ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தையின் பெயர் சாத்விக் என்பதும், குழந்தையின் தந்தை ஆழ்துளை கிணற்றை தோண்டி மூடாமல் விட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.