ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு நிச்சயதார்த்த விழாவில் கோழிக்கறி கேட்டு தராததால் மாப்பிள்ளையின் சகோதரரை குடிபோதையில் கொன்றனர் உறவினர்கள்.
மாப்பிள்ளையின் சகோதரர் அன்வர் இவரது அண்ணனின் நிச்சயதாரத்திற்கு வந்த உறவினர்கள் சிலர் குடித்துவிட்டு பரிமாறும் நபர்களிடம் கோழிக்கறி வேண்டும் என்று கேட்டுள்ளனர் அதற்கு அவர்கள் தீர்ந்துவிட்டதாக கூறியுள்ளனர். அதனால் கோபம் அடைந்தவர்கள் வாக்குவாதம் மேற்கொண்டனர். அந்த சமயத்தில் வந்த அன்வர் அவர்களை சமாதானம்படுத்த முயன்றுள்ளார். அவர்கள் இவரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். கடைசியில் கோபம் அடைந்த உறவினர்கள் அன்வரை பலமாக அடித்தே கொன்றுள்ளனர். தற்போது கொலையாளிகள் மீது போலீசார் இந்திய தண்டனை சட்டம் மற்றும் ஆயுதச்சட்டம் 302, 147, 148 மற்றும் 307 ன் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறை கூறியது, இவர்களுக்கிடையில் சண்டையானது காலை ஒரு மணி அளவில் நடைபெற்றுள்ளது. இதில் அஸ்ஹப் என்ற உறவினரும் அவரது நண்பர்களும்தான் தகராறு செய்து பின்னர் கொலைசெய்துள்ளனர். அவர்களை இன்னும் 24மணி நேரத்திற்குள் பிடித்து விடுவோம் என்று காவல்துறை கூறியுள்ளது.