நவம்பர் 14 ஆம் தேதியிலிருந்து, டிசம்பர் 26 ஆம் தேதிக்கு குழந்தைகள் தினத்தை மாற்றவேண்டும் என்று மேற்கு டெல்லியைச் சேர்ந்த பா.ஜ.க. அமைச்சர் பாராவ் சாஹிப் சிங் வர்மா ஐம்பத்தொன்பது அமைச்சர்களிடம் கையெழுத்து வாங்கிய கடிதம் ஒன்றை பிரதமருக்கு அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் பாராவ் சாஹிப் சிங் வர்மா குறிப்பிட்டிருந்தது, 'நவம்பர் 14 ஆம் தேதி முன்னாள் பிரதமர் ஜவஹர் லால் நேருவின் பிறந்தநாளை மாமா தினமாக கொண்டாடலாம் என்று குறிப்பிட்டிருந்தார். குழந்தைகள் தினமாக டிசம்பர் 26 சீக்கிய மத குருவான குருகோவிந்த் சிங்கின் சாஹிப்சாத் அஜித் சிங் (18), சாஹிப்ஜாதா ஜுஜார் சிங் (14), சாஹிப்சாடா சோராவார் சிங் (9), சாஹிப்சாடா ஃபதே சிங் (7) மகன்கள் வீர மரணம் அடைந்த நாளை அறிவிக்கவேண்டும். நேரு அவர்களை அனைவரும் நேரு மாமா என்றுதான் அழைப்பார்கள். நேரு குழந்தைகளின் மீது உண்மையான அன்பை வைத்திருந்தார் என்பதன் அடிப்படையில் அவர் பிறந்தநாளன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் குருகோவிந்த் அவர்கள் தனது மகன்களை இந்த நாட்டிற்காக அர்பணித்தார் என்று அமைச்சர் வர்மா குறிப்பிட்டுள்ளார் .
ஒரு வேளை நேருவின் பிறந்தநாள் அன்று இருக்கும் குழந்தைகள் தினத்தை டிசம்பர் 26 ஆம் தேதி மாற்றவேண்டும் என்றால் அதனை முதலில் அரசிதழில் வெளியிடவேண்டும். தற்போதைய சட்டகட்டமைப்பில் திருத்தங்கள் கொண்டு வரவேண்டும். வர்மா இதற்கு அதிகாரப்பூர்வமாக ஒரு கடிதத்தையும் பிரதமரிடம் அளிக்கவேண்டும்.