Skip to main content

சந்திரயான் - 3; கவுண்ட் டவுன் தொடங்கியது

Published on 13/07/2023 | Edited on 13/07/2023

 

Chandrayaan - 3; The countdown has begun

 

நிலவில் ஆய்வு செய்வதற்கான முன்னெடுப்புகளை உலக நாடுகள் பலவும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்தியா சார்பில் சந்திரயான்-3 என்ற விண்கலம் ஏவப்பட இருக்கிறது. இதற்கான தயாரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தற்பொழுது ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து எல்.வி.எம்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்ணில் ஏவப்படுவதற்குத் தயார் செய்யப்பட்டு வருகிறது.

 

இதற்கு முன்பாகவே 2008 ஆம் ஆண்டு சந்திரயான்-1, 2019-ல் சந்திரயான்-2 ஆகியவை விண்ணில் செலுத்தப்பட்டிருக்கிறது. 2019 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-2 நிலவில் இறங்கும்போது அதன் ரோவர் பகுதியில் ஏற்பட்ட சேதத்தின் காரணமாக முழுமையாகச் செயல்படுத்த முடியவில்லை. இந்நிலையில் சந்திரயான்-3 என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்த விண்கலமாகப் பார்க்கப்படுகிறது. சந்திரயான்-3 விண்கலம் நாளை பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ ஏற்கனவே அறிவித்து இருந்தது.

 

இந்நிலையில் நாளை பிற்பகல் 2.35 மணிக்கு சந்திராயன் - 3 விண்கலம் விண்ணில் பாய உள்ள நிலையில் சரியாக இன்று மதியம் 1 மணியில் இருந்து 25.30 மணி நேர கவுண்ட் டவுன் தற்போது தொடங்கியுள்ளது. முன்னதாக சந்திரயான்-3ன் மாதிரியை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று காலை வழிபாடு செய்திருந்தனர். மேலும் மதுரை சிங்காரத்தோப்பு மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் சந்திராயன்-3 விண்கலத்தின் பயணம் வெற்றியடைய இஸ்ரோ இயக்குநருக்கு தபால் மூலம் வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்