Skip to main content

சந்திரயான் 2 அனுப்பிய முதல் புகைப்படம்...

Published on 23/08/2019 | Edited on 23/08/2019

நிலவின் தென் துருவம் மற்றும் நிலப்பரப்புகளை ஆராய்வதற்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விண்கலமான சந்திரயான் 2 கடந்த மாதம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

 

chandrayaan 2 first photo of moon

 

 

கடந்த 20-ம் தேதி நிலவின் வட்டப்பாதைக்குள் நுழைந்த சந்திரயான் 2 நேற்று நிலவின் முதல் புகைப்படத்தை எடுத்து அனுப்பியுள்ளது. சுமார் 2650 கிமீ. உயரத்தில் இருந்து சந்திரயான் 2 நிலவை புகைப்படம் எடுத்துள்ளது. வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி அதிகாலை 1.40 மணி அளவில் சந்திரயான் 2 நிலவில் தரையிறக்கப்பட உள்ளது. சந்திரயான் தரையிரங்கும் போது அதை நேரடியாக இஸ்ரோ கட்டுப்பட்டு அறையிலிருந்து பார்வையிட பிரதமர் மோடிக்கு இஸ்ரோ சார்பில் அழைப்பு விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்