மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் முடிந்த நிலையில், 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 11 ஆம் தேதி நடந்த முதல்கட்ட தேர்தலில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மறுதேர்தல் நடத்த வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை வைத்தார். இந்த நிலையில் டெல்லியில் தேர்தல் ஆணைய அதிகாரிகளை அவர் இன்று சந்தித்து பேசினார்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், "தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளில் மத்திய அரசு தலையிடுகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது ஏற்கெனவே புகார் கூறியிருந்தோம். மோடி சொல்லும் அறிவுரைப்படியே தேர்தல் ஆணையம் நடக்கிறது. மற்ற எதிர் கட்சிகளின் புகாரை தேர்தல் ஆணையம் காது கொடுத்து கேட்பதில்லை. மேலும் ஆந்திராவில் இருந்த அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டது அநீதி" என கூறினார்.