கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட மத்திய பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்துவரும் ராகுல் காந்தி, பிரதமர் மோடியை தனது ட்விட்டர் பக்கத்தில் சாடியுள்ளார்.
கடந்த வாரம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி, "எந்தவிதமான புத்திசாலித்தனமும் இல்லாத பட்ஜெட். நாட்டில் நிலவும் பல முக்கியமான பிரச்சனைகளை சமாளிக்கத் தெளிவான ஆலோசனைகள், திட்டங்கள் இல்லாத பட்ஜெட்" என விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, "அன்புக்குரிய பிரதமரே, தேசத்தின் பொருளாதாரம் சீர்குலைந்துவிட்டது. இந்தப் பழியிலிருந்து எப்படித் தப்பிக்கலாம் என்று உங்கள் மூளை கண்டிப்பாகச் சிந்திக்கும். எந்தவிதமான புத்திசாலித்தனமும் இல்லாமல் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த இந்தப் பயனற்ற பட்ஜெட்டைப் பயன்படுத்தி அவரை நிதியமைச்சர் பதவியிலிருந்து நீக்கி ஒட்டுமொத்தப் பழியையும் அவர் மீது சுமத்துங்கள். பிரச்சனை அனைத்தும் தீர்ந்துவிடும்" என தெரிவித்துள்ளார்.