மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
உத்ரப் பிரதேசம் மாநிலம், நொய்டாவில் பேசிய மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் மக்கள் தொகை பெருக்கத்தால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கிறது. மேலும் சமூக அமைதியையும் குலைக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
சீனாவிற்கு இணையாக இந்தியாவிலும் மக்கள் தொகை பெருக்கம் அதிகமாகியிருக்கிறது. ஆனால் சீனாவில் இருப்பதைவிட இந்தியாவில் பரப்பளவும், இயற்கை வளங்களும் குறைவாக இருக்கிறது என தெரிவித்தார்.
மக்கள் தொகை கட்டுப்பாடு நடவடிக்கைகள் 22 இஸ்லாமிய நாடுகளில் தீவிரமாக செய்யல்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவில் மட்டுமே இது மதத்துடன் சம்பந்தப்பட்டு பார்க்கப்படுகிறது. எனவே மக்கள் தொகையை கட்டுபடுத்துவது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு எனது பதவியையும் இராஜினாமா செய்ய தயராக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.