கரோனா காலத்தில் நீட், ஜெ.இ.இ தேர்வுகளை நடத்தக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர பஞ்சாப், ராஜஸ்தான், சதீஷ்கர், புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட 7 மாநிலங்கள் முடிவு செய்துள்ளது. சோனியாவுடனான ஆலோசனைக்குப் பின் ஜார்கண்ட், மகாராஷ்டிர மாநில அரசுகளும் வழக்குத் தொடர முடிவு செய்துள்ளது. அதேபோல் நீட் தேர்வு கட்டாயம் நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் சாமி, "நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளை நடத்தாமல் தாமதப்படுத்துவது மாணவர்களின் படிப்பை பாதிக்கும் என டெல்லி ஐ.ஐ.டி இயக்குநர் தெரிவித்திருக்கிறார். ஆனால், ஊரடங்கு நாட்டின் பொருளாதாரத்தை பெரிதளவு பாதித்துள்ளது. அப்படியானால், ஊரடங்கை அறிவித்ததன் மூலம் பிரதமர் மோடி தவறான முடிவை எடுத்துள்ளாரா? இன்றும் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது" இவ்வாறு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.