சமூகவலைத்தளங்களை கண்காணிக்கும் எண்ணத்தை திரும்ப பெறுவதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அண்மையில் சமூகவலைத்தளங்களில் பரவும் போலி செய்திககளை கண்காணிக்க மத்திய அரசு முடிவு செய்து அது தொடர்பான தகவலைகளை வெளியிட்டது. அதாவது பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூகவலைத்தளங்களில் மக்களால் அனுப்பப்படும் மற்றும் பகிரப்படும் செய்திகள் கண்காணிக்கப்படும். சில தனியார் நிறுவனங்களின் உதவியுடன் இந்த கண்காணிப்பு நடைபெற இருக்கிறது. இந்த தனியார் நிறுவனங்கள் மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை கீழ் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்த செயல் மக்கள் சுதந்திரத்தை பறிக்கும் செயல் என பல எதிர்ப்புகள் கிளம்பிவந்த நிலையில் திரிமுனால் காங்கிரஸ் சார்பில் வழக்கும் பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது இந்த கண்காணிப்பு திட்டத்தை பற்றி முழு ஆய்வுசெய்ய இருப்பதாகவும் அதனால் சமூக ஊடகங்களை கண்காணிக்கும் எண்ணத்தை திரும்ப பெறுவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.