கேரள மாநிலத்தில் சிபிஐ விசாரணைக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய புலனாய்வு பிரிவுக்கு (சிபிஐ) அளித்த பொது ஒப்புதலை திரும்பப்பெறுவதாக கேரளா அறிவித்துள்ளது. பாஜக அல்லாத ஆளும் அரசுகளைக் கொண்ட மாநிலங்கள் பலவும், மத்திய அரசு விசாரணை முகமைகளை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தி வருவதாக குற்றம்சாட்டி வருகின்றன. இப்படியா தொடர் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, மேற்கு வங்கம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு (சிபிஐ) அளித்த பொது ஒப்புதல் ரத்து செய்யப்பட்டது. இவ்வாறு பொது ஒப்புதல் ரத்து செய்யப்பட்ட மாநிலங்களில் சிபிஐ ஏதேனும் வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்றால் முன்கூட்டியே அம்மாநில அரசிடம் சிபிஐ ஒப்புதல் வாங்கவேண்டிவரும். தற்போது இதேபோன்று பொது ஒப்புதல் ரத்து கேரளாவிலும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதன்மூலம் இனி கேரளாவில் விசாரணை மேற்கொள்ளக் கேரள அரசிடம் சிபிஐ அனுமதி பெறவேண்டிய சூழல் உருவாகியுள்ளது.