Skip to main content

சிபிஐ வழக்குப்பதிவு விவகாரம் - அதிகாரிகளை பழிவாங்கும் நடவடிக்கை: நாராயணசாமி

Published on 22/09/2017 | Edited on 22/09/2017
சிபிஐ வழக்குப்பதிவு விவகாரம் - அதிகாரிகளை பழிவாங்கும் நடவடிக்கை: முதல்வர் நாராயணசாமி

மருத்துவக்கல்லூரி விவகாரத்தில் சிபிஐ வழக்குப்பதிவானது அதிகாரிகளை பழிவாங்கும் நடவடிக்கையாகும். நிர்வாகத்தை முடக்கும் சதிவேலையில் ஒருசிலர் ஈடுபட்டுள்ளதாகவும் முதல்வர் நாராயணசாமி ஆளுநர் கிரண்பேடி மீது மறைமுகமாக குற்றம் சாட்டினார்.

புதுச்சேரியில் இரு ஐஏஎஸ் அதிகாரிகள் உட்பட 13 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது தொடர்பாக முதல்வர் நாராயணசாமியிடம்  கேட்டதற்கு  அவர் கூறியதாவது:

மருத்துவக்கல்லூரிகளை கண்காணிப்பதற்கு இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு (எம்சிஐ) மட்டுமே அதிகாரமுள்ளது. தகுதியான மாணவர்களை தேர்வுசெய்து அனுப்புவது மட்டுமே மாநில அரசின் வேலையாகும். புதுச்சேரியில் அரசு அதிகாரிகள் மீது எவ்வித தவறும் இல்லை. தவறினை நிர்வாகம் செய்திருந்தால் அரசு பொறுப்பு ஏற்க முடியாது.

சிபிஐ அமைச்சராக  நான் இருந்துள்ளதால் இவ்விஷயத்தில் எதுவும் கூற முடியாது. புதுச்சேரியிலுள்ள அதிகாரிகளை பழிவாங்கும் நோக்கில் வேலையை ஒரு சிலர் செய்து வருகின்றனர். நிர்வாகத்தை முடக்கும் சதிவேலையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். அதை சமாளிக்கும் சக்தி உண்டு.

தொடர்ந்து ஒன்றேகால் ஆண்டுகளாக இதேபோன்று செயல்படுவதுடன், மத்திய அரசுக்கு கடிதம் அனுப்புவது, ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை முன்வைப்பது என தனது அதிகார எல்லையை மீறி செயல்பாடு உள்ளது.

ஆனால், தலைமை செயலர், செயலர் மற்றும் நாங்கள் எங்களின் நிர்வாக எல்லைக்குள்தான் செயல்படுகிறோம் என்று அவர் கூறினார்.

- சுந்தரபாண்டியன்

சார்ந்த செய்திகள்