Published on 26/03/2020 | Edited on 26/03/2020
தற்போது கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 4,86,702 என்ற எண்ணிக்கையிலும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,17446 என்ற அளவிலும் இருக்கிறது. தற்பொழுது கரோனா தொற்றால் உலக அளவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22,020 ஆகும்.கடந்த 24 மணி நேரத்தில் ஸ்பெயினில் மட்டும் கரோனா வைரஸால் 1098 பேர் உயிரிழந்து உள்ளனர்.
சுமார் 190 நாடுகளில் இயல்பு நிலை கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொசுக்கள் மூலம் கரோனா பரவாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொசுக்கள் மூலமாக கரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவுகிறது என்ற வதந்தியில் உண்மை இல்லை எனச் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வரும் நிலையில் மத்திய சுகாதாரத்துறை இந்த விளக்கத்தைக் கொடுத்துள்ளது.