Skip to main content

தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் - தேர்தல் ஆணையம் முடிவு!

Published on 24/07/2020 | Edited on 24/07/2020

 

jkl

 

தமிழகத்தில் குடியாத்தம், திருவெற்றியூர், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ளது. சட்டமன்றத் தொகுதி காலியாக இருந்தால் ஆறு மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும். 

 

இன்னும் சில மாதங்களில் அதாவது 2021-இல் பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில் இந்த மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வருமா என்ற கேள்வி எழுந்தது. கரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் காரணத்தால் மூன்று தொகுதிகளிலும் தேர்தல் நடத்துவது குறித்து தற்போதைக்கு தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், செப்டம்பர் 7ஆம் தேதி வரை இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. 

 

இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற தேர்தல் ஆணைய கூட்டத்தில் நாடு முழுவதும் காலியாக இருக்கும் 56 சட்டமன்ற, மக்களவை தொதிகளில் தேர்தல் நடத்தது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தல் அடுத்த 10 மாத்தில் நடத்தப்பட வாய்ப்பிருப்பதால் தமிழகத்தில் காலியாக இருக்கும் மூன்று தொகுதிகளுக்கு இடைதேர்தல் நடத்தப்பட வாய்ப்புகள் மிகக் குறைவாக இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
 

 

சார்ந்த செய்திகள்