Skip to main content

கேரளாவில் 2019-க்குள் 9 லட்சம் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள்!

Published on 20/08/2017 | Edited on 20/08/2017
கேரளாவில் 2019-க்குள் 9 லட்சம் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள்!

கேரளாவில் வரும் 2019-ஆம் ஆண்டுக்குள் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை 9 லட்சமாக உயர்த்தப்படும் என அந்த அமைப்பின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இடது முன்னணி ஆட்சியில் இருக்கும் மாநிலம் கேரளா. இங்கு கடந்த சில மாதங்களாக அரசியல் கொலைகள் நடந்தவண்ணம் உள்ளன. இதுகுறித்து பேசிய கேரள மாநில ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் ஜே.நந்தகுமார், ‘மாநிலத்தில் சமீப காலமாக ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களின் மீதான தாக்குதல்கள் அதிகரித்தவண்ணம் உள்ளன. இருந்தபோதிலும், எங்கள் சங்கத்தின் குறிக்கோளான சமூகத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களையும் முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

எஙகள் சங்கத்தின் உறுப்பினர்கள் மீதான தாக்குதல்கள், எங்கள் செயல்பாடுகளை அதிகரித்துள்ளன என்பதுதான் உண்மை. நாங்கள் மேலும் கூடுதலாக எங்கள் பணிகளைச் செய்ய இருக்கிறோம். அதில் முக்கிய பங்காக கேரளாவில் வரும் 2019-ஆம் ஆண்டுக்குள் 9 லட்சம் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களை உருவாக்க இருக்கிறோம். 

இடது முன்னணி ஆட்சியில் இருக்கும் மாநிலமாக இருந்தாலும், இங்கு நாளொன்றுக்கு 5,000 சாகா கூட்டங்கள் நடக்கின்றன. இது குஜராத் மாநிலத்தை விட அதிகம். இடது முன்னணி அதன் அடித்தளத்தை தவறவிடுவதால், ஆர்.எஸ்.எஸ்.-ல் சேரும் இளைஞர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த மாநிலத்தில் இளைஞர்கள் தேசத்தை முன்னேற்றும் அரசியலைத் தான் விரும்புகிறார்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்