ராஜஸ்தானில் டிசம்பர் 7 ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக படுதோல்வி அடையும் என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் அனைத்தும் தெரிவிக்கின்றன. இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்குள் முதல்வர் பதவிக்காக சச்சின் பைலட்டுக்கும் அசோக் கெலாட்டுக்கும் இடையே பிளவு ஏற்பட்டிருப்பதாக பாஜக வதந்தியை பரப்புவதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
தங்களுக்குள் எந்த மோதலும் இல்லை என்று சச்சின் பைலட்டும், அசோக் கெலாட்டும் பகிரங்கமாக அறிவித்துள்ளனர். இருவரும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று முதலில் அறிவித்திருந்தனர். அசோக் கெலாட்டை ஓரங்கட்டவும், முதல்வர் வேட்பாளர் போட்டியிலிருந்து விலக்கி வைக்கவுமே இந்த முடிவு என்று பாஜக வதந்தியை பரப்பியது.
இந்நிலையில், ராகுலின் உத்தரவை ஏற்று இருவரும் தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருப்பதாக கெலாட்டும், சச்சினும் அறிவித்துள்ளனர். பாஜகவின் வதந்தியும் பொய்யும் வெற்றிபெறாது என்று இருவருமே கூறியுள்ளனர்.