Published on 06/12/2018 | Edited on 06/12/2018

உத்தரப் பிரதேச மாநிலம், பஹ்ரைச் தொகுதி பாஜக எம்.பி. சாவித்ரிபாய் புலே அக்கட்சியில் இருந்தும், தனது எம்.பி பதவியிலிருந்தும் இன்று விலகினார். இது குறித்து அவர், 'பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், விஸ்வ ஹிந்து பரிஷத் போன்றவை மதத்தின் பெயரால் சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்த முனைகின்றன. பாபாசாகேப் அம்பேத்கர் கொண்டு வந்த இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்படுத்த பாஜக முயலுகிறது. மேலும் வளர்ச்சி திட்டங்களில் கவனத்தை செலுத்துவதற்கு பதிலாக கோயில், சிலைகள் என தேவையற்ற வகையில் செலவு செய்கிறது' என கூறினார்.