காஷ்மீரில் பாஜக மற்றும் கூட்டணி கட்சியான மக்கள் ஜனதா கட்சிக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் மக்கள் ஜனதா கட்சியுடனான கூட்டணியில் இருந்து விலகுவதாகவும் காஷ்மீர் பாஜகவின் மாநில பொறுப்பாளர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார். 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 87 தொகுதிகளில் 25 இடங்களில் பாஜகவும், 27 இடங்களில் மெகபூபாவும், காங்கிரஸ் 12 இடங்களிலும் உமர் அப்துல்லா கட்சி 15 இடங்களிலும் வெற்றிபெற்று பாஜக மஜக கூட்டணி ஆட்சியை பிடித்து.
ஆனால் தற்போது காஷ்மீரில் போர் நிறுத்தம் தொடர்பான கருத்து வேறுபாட்டினால் பாஜக மற்றும் மஜக கூட்டணி முறிவடைத்துள்ளது என காஷ்மீர் பாஜகவின் மாநில பொறுப்பாளர் ராம் யாதவ் தெரிவித்துள்ளார். மேலும் இந்த கூட்டணி விலகல் முடிவு பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷா வழிகாட்டுதலின் படியே நடந்துள்ளது எனவும் இதனால் காஷ்மீரில் ஆட்சி கவிழும் சூழல் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.