Published on 01/04/2019 | Edited on 01/04/2019
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேசம் மாநிலம் அமேதி மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் பலத்தை அதிகரிக்கும் பொருட்டு அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வயநாடு தொகுதியில் பாஜக பலம் மிகுந்த வேட்பாளரை களமிறக்கும் என தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் தற்போது அந்த தொகுதியை தங்களின் கூட்டணி கட்சிக்கு பாஜக கொடுத்துள்ளது. பாஜக வின் கூட்டணி கட்சியான பாரத் தர்ம சேனா என்ற கட்சியைச் சேர்ந்த துஷார் வெல்லப்பளி, வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என்று பாஜக தலைவர் அமித் ஷா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.