சத்தீஸ்கர் சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட ஓட்டுப்பதிவு 18 தொகுதிகளில் இன்று காலை துவங்கியுள்ளது.
மொத்தம் 90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதில் முதல் கட்ட தேர்தல் 18 தொகுதிகளில் இன்று தொடங்கியுள்ளது. அதில் பத்து தொகுதிகளில் காலை 7 மணிக்கும், நக்ஸல்கள் அச்சுறுத்தல் இருக்கும் மீதமுள்ள 8 தொகுதிகளில் காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளது. இந்த தேர்தல் மாலை 5 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இன்று நடைபெறும் முதல் கட்ட தேர்தலில் இதுவரை 16.24% வாக்குகளை வாக்காளர்கள் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோல நேற்று நக்ஸல்கள் தாக்குதலை நடத்திய ஒரு வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவு செய்ய பல வாக்களர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். மேலும், நக்ஸல்கள் இந்த தேர்தலை புறக்கணியுங்கள் என்று பேனர்கள் வைத்து உள்ளனர் அதையும் மீறி அங்குள்ள மக்கள் வாக்கு செலுத்தி வருகின்றனர்.