பிறக்கும்போது எல்லோருமே இந்துக்களே! - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
மனிதர்கள் அனைவரும் பிறக்கும்போது இந்துக்களே என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். இது பொதுத்தளத்தில் செயல்படுபவர்களிடன் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரித்வாரில் தனது பிறந்ததினமான நேற்று, பதஞ்சலி யோக்பீத் என்ற நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய சாமியார் பாபா ராம்தேவ் உடன் மோகன் பாகவத் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ‘நாம் மக்களை இந்துக்களாக மதமாற்றம் செய்வதில்லை. நாம் நம் முன்னோர்களை நம்புகிறோம். யார் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது தேவையில்லை. இந்துத்துவத்தின் கதவுகள் எப்ப்போதும் திறந்தே இருக்கும். ஏனென்றால் நாம் எல்லோருமே உண்மையில் இந்துக்கள்தான். இங்கு பிறக்கும் மனிதர்கள் அனைவருமே இந்துக்கள்தான். பின்னர் அவரவர் நம்பிக்கைகளுக்குத் தகுந்தாற்போல் மற்ற மதங்களைப் பின்பற்றத் தொடங்கிவிடுகின்றனர்’ இவ்வாறு பேசியுள்ளார்.
அவரது இந்த கருத்து பொதுத்தளத்தில் மிகவும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
- ச.ப.மதிவாணன்