Published on 05/01/2022 | Edited on 05/01/2022
கரோனாவால் இந்தியாவில் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
இதனைத்தொடர்ந்து பல்வேறு மாநிலங்கள், கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக வழங்க முடிவு செய்து, அதற்கான நடைமுறைகளை தொடங்கியுள்ளன. இதற்கிடையே பீகார் மாநிலம், கரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நான்கு லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என அறிவித்திருந்தது.
இந்தநிலையில் இன்று நடைபெற்ற பீகார் அமைச்சரவை கூட்டத்தில், கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.