பிக் பாஸ் தமிழின் மூன்றாம் பாகம் ஜூன் 23-ஆம் தேதி தொடங்கியது. வழக்கம் போல் கமல்ஹாசன் இதனை தொகுத்து வழங்கினார். பிரம்மாண்டமாய் இந்த நிகழ்ச்சியின் முதல் எபிசோட் ஒளிபரப்பானது. போட்டியாளர்கள் ஓவ்வொருவரையும், கமல்ஹாசன் அறிமுகம் செய்தார். பலத்த கரவோஷங்களுக்கு இடையே, அவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டவர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியாகி உள்ளது.
மராத்தி மொழியில் ஒளிபரப்பாகும், பிக்பாஸ் 2 போட்டியில் பங்கேற்ற, மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த அபிஜித் பிஜுகாலே காசோலை மோசடி வழக்கில், கைது செய்யப்பட்டார்.
மும்பையில், பிக்பாஸ் படப்பிடிப்பு நடக்கும் அரங்கிற்கு, சமீபத்தில் போலீசார் வந்தனர். கடந்த, 2015ல், சுரேஷ் என்பவருக்கு, அபிஜித் கொடுத்த காசோலை, பணம் இல்லாமல் திரும்பி விட்டது. இது தொடர்பான வழக்கில், அபிஜித்தை கைது செய்ய, 'வாரன்ட்' உடன் வந்திருப்பதாக, போலீசார் தெரிவித்தனர். இதற்கு, படப்பிடிப்பு குழுவினர் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. இதையடுத்து, கைது செய்யப்பட்டார்.
அப்போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக அவர் சொன்னதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, காசோலை மோசடி வழக்கில், அபிஜித்துக்கு, 'ஜாமின்' அளிக்கப்பட்டாலும், மற்றொரு ஆள் கடத்தல் வழக்கில், அவன் கைது செய்யப்பட்டுள்ளதாக, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபிஜித் பிஜுகாலே சட்டசபை மற்றும் மக்களவைத் தேர்தல்களில் சுயேச்சையாக போட்டியிட்டுள்ளார்.