ஸ்விகி நிறுவனத்துக்கு டெலிவரி செய்யும் இளைஞர்கள் சாலை விதிகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெங்களூர் காவல் துறை கமிஷனர் தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் ஸ்விகி, சொமெட்டோ நிறுவனங்கள் சார்பாக உணவு டெலிவரி செய்யப்பட்டு வருகின்றது. குறிப்பாக பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நகரங்களில் அதனை வாடிக்கையாளர்கள் மிக அதிகம்.
அந்த வகையில், பெங்களுரூவில் இந்த உணவு டெலிவரி செய்யும் இளைஞர்களால் அடிக்கடி விபத்து நடப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனை அடுத்து அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்துக்கு காவல்துறையினர் இதுகுறித்து தெரிவித்தனர். இருந்தாலும் தொடர்ந்து சாலை விதிமீறல், அதிவேகம் உள்ளிட்ட குற்றங்களில் உணவு டெலிவரி செய்யும் இளைஞர்கள் சிக்குகிறார்கள். இதனால் கோபமான காவல்துறையினர் இனிமேல் டெலிவரி செய்பவர்கள் சாலை விதிமுறைகளை மீறினால் ஸ்விகி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.