Skip to main content

பாடப்புத்தகத்தில் தவறான புகைப்படம்..

Published on 20/08/2018 | Edited on 20/08/2018
mika

 

பறக்கும் சீக்கியர் என்று செல்லமாக அழைக்கப்பட்டவர் ஓட்டப்பந்தய வீரர் மில்கா சிங். காமன்வெல்த் போட்டியில் முதல் தங்கம் வாங்கிய வீரர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரரான இவரது கதை, பாக் மில்கா பாக் என்று திரைப்படமாக எடுக்கப்பட்டது. அதில் பர்ஹான் அக்தர் மில்கா சிங் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த படமும் செம ஹிட் அடித்தது.

 

இந்நிலையில், மில்கா சிங் பற்றி மேற்குவங்க மாநில பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த கட்டுரையில் மில்கா சிங் புகைப்படத்தை வைப்பதற்கு பதிலாக மில்கா சிங் கதாபாத்திரத்தில் நடித்த பர்ஹான் அக்தர் புகைப்படத்தை வைத்துள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனை பர்ஹான் அக்தரே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், என்னுடைய புகைப்படத்தை வைத்திருக்கிறீர்கள். மில்கா ஜியின் புகைப்படத்தை மாற்றுங்கள் என்று மேற்குவங்க மாநில கல்வி அமைச்சரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.              

சார்ந்த செய்திகள்

Next Story

''சிங்கங்களின் பெயரை மாற்றுங்கள்...'' - வினோத வழக்கில் தீர்ப்பு

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
 "Change the name of the lions...." -Judgment in a strange case

மேற்குவங்க மாநிலம் சிலிபுரியில் உள்ள பெங்கால் சபாரி உயிரியில் பூங்காவில் உள்ள ஆண் சிங்கத்திற்கும் பெண் சிங்கத்திற்கும் பெயர் மாற்ற வேண்டும் என்ற விஷ்வ இந்து அமைப்பின் கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேற்குவங்க மாநிலம் சிலிபுரியில் உள்ள பெங்கால் சபாரி உயிரியில் பூங்காவில் பல்வேறு வனவிலங்குகள் உள்ளது. இந்நிலையில் திரிபுரா மாநிலத்தில் இருந்து கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி 7 வயது ஆண் சிங்கம் ஒன்று பூங்காவிற்கு கொண்டுவரப்பட்டது. அதன் பெயர் அக்பர். அதேபோல அங்கு இருக்கும் 6 வயது பெண் சிங்கத்தின் பெயர் சீதா. ஒரே இடத்தில் அக்பர், சீதா என பெயர் கொண்ட ஆண் பெண் சிங்கங்கள் இருப்பதற்கு விஷ்வ இந்து அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. வினோதமான முறையில் இதற்கு வழங்கும் தொடுக்கப்பட்டது. இராமாயண கதாபாத்திரமான சீதா இந்து மத வழக்கங்களில் கொண்டாடப்படுபவர். அதனால் அக்பர் என்ற பெயருடைய சிங்கத்துடன் சீதா என்ற பெயர் கொண்ட சிங்கத்தை தங்க வைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் செயல். எனவே சிங்கங்களின் பெயரை மாற்ற வேண்டும் என கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது விஷ்வ இந்து அமைப்பு.

இந்த வழக்கு தொடர்பாக நடைபெற்ற முதல் விசாரணையில், அன்பின் அடிப்படையில் சிங்கங்களுக்கும் பெயர் சூட்டப்பட்டு இருக்கலாம், இதில் என்ன பிரச்சனை என நீதிபதி சவுகத் பட்டாச்சார்யா கேள்வி எழுப்பினார். ஆனால் இதற்கு விஷ்வ இந்து அமைப்பு, இன்று சிங்கத்திற்கு பெயர் வைத்தது போல நாளை வேறு விலங்குகளுக்கு பெயர் வைக்கலாம். எனவே இதை தடுக்க வேண்டும். இது எங்களுடைய மனதை புண்படுத்தும் என பதில் அளிக்கப்பட்டது.

துர்கா பூஜையில் சிங்கம் இடம் பெற்றுள்ளது. பல இந்து கடவுள்களின் வாகனங்களாக சிங்கங்கள் உள்ளது. சிங்கங்கள் கடவுளாகவும் போற்றப்படுகிறது என நீதிபதி கேள்வி எழுப்பினார். கடவுள்களின் வாகனங்கள் தான் சிங்கங்கள். ஆனால் அவைகளை வணங்குவதற்காக தனியாக மந்திரங்கள் இல்லை என மனுதாரர் தரப்பில் பதில் வைக்கப்பட்டது.

இந்த மனுவை பொதுநலமனுவாக தாக்கல் செய்ய அறிவுறுத்திய நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக மேற்கு வங்க அரசு விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டிருந்தது. குறிப்பிட்ட சிங்கங்களுக்கு பெயர் வைத்தது மேற்கு வங்க அரசோ அல்லது பூங்கா நிர்வாகமோ அல்ல, சிங்கங்களை ஏற்கனவே வைத்திருந்த திரிபுரா உயிரியல் பூங்கா அதிகாரிகள் தான் என மேற்குவங்க அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மீண்டும் பிப்ரவரி 22 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்து அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்தது. இந்த வழக்கில் நீதிபதி சவுகத் பட்டாச்சார்யா பல்வேறு கேள்விகளை எழுப்பினார். ''நேற்று இரவு நான் நன்றாக யோசித்துப் பார்த்தேன். கடவுள், சுதந்திர போராளிகள், தலைவர்களின் பெயர்களை ஒரு விலங்குக்கு வைக்கலாமா? ஒரு சிங்கத்திற்கு விவேகானந்தர் என்றோ, ராமகிருஷ்ண பரமஹமசர் என்றோ பெயர் வைப்பீர்களா? அதை உங்களால் செய்ய முடியுமா? என்று கேள்வி எழுப்பியதோடு, மேற்குவங்க அரசு வழக்கறிஞரைப் பார்த்து, உங்கள் வீட்டில் செல்ல பிராணிகளின் பெயர்கள் என்ன என கேட்டார். அதற்கு அவர், டாஃபி, டஃபில், தியோ என பதிலளித்தார். எந்த சர்ச்சையும் ஏற்படாத வகையில் வீட்டு விலங்குகளுக்கு பெயர் வைத்துள்ள நீங்களே சிங்கங்களின் பெயரை மாற்றம் செய்ய வேண்டும் அதிகாரிகளிடம் கேளுங்கள் என நீதிபதி தெரிவித்தார். மேலும் தயவு செய்து எந்த விலங்குகளுக்கும் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ தீர்க்கதரிசிகள், சுதந்திர போராளிகள் பெயர்களை  வைக்க வேண்டாம் எனவும் உத்தரவிட்டார்.

Next Story

''யார் தடுத்தாலும் சி.ஏ.ஏ கட்டாயம் அமலுக்கு வரும்'' - அமித்ஷா பேச்சு

Published on 29/11/2023 | Edited on 29/11/2023

 

"CAA will come back into force no matter who stops it" - Amit Shah's speech

 

அண்மையில் பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு வெடித்தது. இதனால் போராட்டங்களும் வெடித்தது. இந்நிலையில் யார் தடுத்தாலும் குடியுரிமை திருத்தச் சட்டம் கட்டாயம் அமல்படுத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், 'குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்த்து வருகிறார். ஆனால் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வரும். இதனை யாரும் தடுக்க முடியாது. அந்த சட்டத்தால் ஒட்டுமொத்த நாட்டு மக்களும் பயன்பெறுவர். அனைவருக்கும் அந்த சட்டம் அதிகாரம் அளிக்கும். அரசியல் வன்முறை, ஓட்டுக்காக சமாதானப்படுத்துதல், ஊழல், சட்டவிரோத ஊடுருவல் போன்றவைக்கு அனுமதி அளித்ததன் மூலம் மேற்கு வங்கத்தை தற்போதைய மாநில அரசு சீரழித்துள்ளது. வரும் 2026 ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் இரண்டில் மூன்று பங்கு வாக்குகளை பெற்று பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும். வரும் தேர்தலில் மம்தா பானர்ஜிக்கும், திரிணாமுல் காங்கிரசுக்கும் மக்கள் பாடம் புகட்ட வேண்டும்' என தெரிவித்தார்.