தங்கள் சாதி பெண்கள் திருமணத்திற்கு முன்பு செல்போனைகளை பயன்படுத்த கூடாது என குஜராத்தில் உள்ள தாக்கூர் சமூகத்தினர் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளனர்.
குஜராத் மாநிலத்தின் வடக்கு மாவட்டங்களில் ஒன்றான பனஸ்கந்தா மாவட்டத்தில் அதிக அளவு வசித்து வரும் தாக்கூர் சமூகத்தினர் சில தினங்களுக்கு முன்பு ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் திருமணமாகாத பெண்கள் செல்போன் பயன்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இதன் முடிவில், அந்த மாவட்டத்தில் வசிக்கும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள தங்கள் சமூகத்தை சேர்ந்த திருமணமாகாத பெண்கள் இனி செல்போன் பயன்படுத்த கூடாது என அறிவிக்கப்பட்டது. மேலும் தடையை மீறி செல்போன் பயன்படுத்தினால் 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவித்த அன்றே இந்த சட்டம் அந்த சுற்றுவட்டத்தில் உள்ள கிராமங்களில் மிக தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.