குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஜெகதீப் தங்கர் வெற்றி பெற்றார்.
குடியரசு துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் ஆகஸ்டு மாதம் 10ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதன் காரணமாக குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்தல் சில வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. இதில், பாஜக கூட்டணி சார்பில் ஜகதீப் தன்கரும், எதிர்க்கட்சிகள் சார்பில் மார்கரெட் ஆல்வாவும் போட்டியிட்டார்கள். இந்தத் தேர்தலில் மக்களவை, மாநிலங்களவையைச் சேர்ந்த எம்.பி.க்கள் வாக்களித்தனர்.
இன்று காலை துவங்கிய இந்த வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. இதில் பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக எம்பிக்கள் தங்களுடைய வாக்கை செலுத்தினார்கள். திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் வாக்குப்பதிவை புறக்கணித்தார்கள். மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் சில மணி நேர இடைவெளியில் வாக்கு எண்ணிக்கை துவங்கியது. இதில் பாஜக கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தங்கர் வெற்றிபெற்றார்.