கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்துக்கு ஒரு நிகழிச்சியில் கலந்துகொள்ள வந்த மத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோவை மாணவர்கள், அவரின் தலைமுடியை இழுத்துத் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய சுற்றுச்சூழல்துறை இணையமைச்சரான பபுல் சுப்ரியோவை ஜாதவ்பூர் பல்கலைக்கழக ஏபிவிபி அமைப்பினர், ஒரு நிகழ்ச்சிக்காக சிறப்பு விருந்தினராக அழைத்தனர். இதனையடுத்து அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பல்கலைக்கழக வழக்கத்திற்கு வந்தார். அப்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள், பாஜக, ஆர்எஸ்எஸ், ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்கள் யாரும் உள்ளே வரக்கூடாது. சுதந்திரமான சிந்தனை கொண்ட இந்தப் பல்கலைக்கழகத்துக்குள் அவர்களுக்கு அனுமதியில்லை என கூறி முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது தனது காரிலிருந்து வெளியே வந்த பபுல் சுப்ரியோ மாணவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. பபுல் சுப்ரியோ மாணவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது, இதனையடுத்து மாணவர்கள் அவரது தலைமுடியை பிடித்து தாக்கியுள்ளனர். பின்னர் காவலர்கள் உதவியுடன் அங்கு வந்த அம்மாநில ஆளுநர், பபுல் சுப்ரியோவை மீட்டு சென்றார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.