Published on 28/05/2023 | Edited on 28/05/2023
மூன்று வாரங்களாகவே மணிப்பூரில் தொடர்ந்து வன்முறை வெடித்து உயிரிழப்புகள் நடந்து வரும் நிலையில் ஆயிரக்கணக்கானோர் தங்களது இல்லங்களிலிருந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.
வேற்று மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பத்திரமான இடங்களில் தங்க வைக்கப்பட்டும், வெளியேற்றப்படும் வருகின்றனர். இந்தநிலையில் மணிப்பூரில் வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 30 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து பாதுகாப்புப் படையினர் அதிரடி நடவடிக்கையாக தாக்குதல் நடத்தியதாகவும், இதில் 30 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்றும், சிலர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் தகவல் வெளியிட்டுள்ளார்.