ஆந்திரா: 24 தமிழர்கள் கைது
ஆந்திர மாநிலம், கடப்பாவில் செம்மரம் கடத்த முயன்றதாக கூறி 24 தமிழர்கள் உள்பட 26 பேரை ஆந்திர வனத்துறையினர் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருநது 52 செம்மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர் என்றும், அவற்றின் மதிப்பு ரூபாய் 2 கோடி மதிப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களிடம் வனத்துறை அதிகாரிகள், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.