Skip to main content

மேற்குவங்கத்தில் தொடர்ந்து காலியாகும் பாஜக கூடாரம்!

Published on 27/10/2021 | Edited on 27/10/2021

 

bjp mla

 

மேற்கு வங்கத்தில் இந்தாண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் மாபெரும் வெற்றியைப் பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. மம்தா பானர்ஜி தொடர்ந்து மூன்றாவது முறையாக மேற்குவங்கத்தின் முதல்வரானார்.

 

இதனைத்தொடர்ந்து பாஜக எம்.எல்.ஏ-க்கள் அடுத்தடுத்து திரிணாமூல் காங்கிரஸில் இணைந்து வருகின்றனர். ஏற்கனவே நான்கு பாஜக எம்.எல்.ஏ-க்கள் திரிணாமூல் காங்கிரஸில் இணைந்திருந்த நிலையில், இன்று கிருஷ்ண கல்யாணி என்ற ஒரு பாஜக எம்.எல்.ஏ திரிணாமூல் காங்கிரஸில் இணைந்துள்ளார்.

 

தனது கட்சி எம்.பி-யுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து , பாஜகவில் இருந்து விலகி திரிணாமூல் காங்கிரஸில் இணைந்துள்ள  கிருஷ்ண கல்யாணி, "மேற்குவங்கத்தில் மக்களுக்காக உண்மையாகப் பணி செய்யும் ஒரே ஒருவர் மம்தா பானர்ஜிதான்" எனவும் தெரிவித்துள்ளார்.

 

மேற்குவங்க சட்டமன்ற தேர்தலுக்குப் பின்னர், இதுவரை ஐந்து பாஜக எம்.எல்.ஏ-க்களும், பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய இணையமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்