Published on 20/02/2019 | Edited on 20/02/2019
ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான வரிச் சலுகை வரம்பை மத்திய அரசு தளர்த்தி 10 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான வரிச் சலுகை 7 ஆண்டுகளாக இருந்தது, தற்போது இது 10 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான வரிச் சலுகை ரூ.10 கோடியாக இருந்தது, இது தற்போது ரூ.25 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் ஆண்டு வருமானம் எந்த ஒரு ஆண்டிலும் ரூ. 100 கோடியைத் தாண்டியிருக்கக் கூடாது எனவும் ஆண்டு வருமானம் உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்குமுன் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.25 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.