இந்திய முப்படைகளின் தலைமை தளபதியாக அனில் சவுகான் பதவியேற்றார்.
முப்படைகளின் தலைமைத் தளபதியாக இருந்த பிபின் ராவத், கடந்த ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, அந்த பதவி ஒன்பது மாதங்கள் காலியாக இருந்தது. இந்த நிலையில், ஓய்வுபெற்ற கிழக்கு பிராந்திய ராணுவ தளபதி அனில் சவுகான், முப்படைகளின் தலைமை தளபதியாக அறிவிக்கப்பட்டிருந்தார்.
இதையடுத்து, அனில் சவுகான் இன்று (30/09/2022) அப்பதவியை ஏற்றுக் கொண்டார். அப்போது, ராணுவம், விமானப்படை, கடற்படை தளபதிகளும் உடனிருந்தனர்.
முன்னதாக, புதிய தலைமை தளபதிக்கு முப்படையினரும் அணிவகுப்பு மரியாதைக் கொடுத்தனர். பதவியேற்ற பிறகு பேசிய அனில் சவுகான், மூன்று படையினரின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்திச் செய்யும் வகையில் செயல்பட போவதாக உறுதியளித்துள்ளார்.
முப்படைகளும், எதிர்கொள்ளும் சவால்களையும், சிக்கல்களையும் ஒருங்கிணைந்து சந்திக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.