Skip to main content

அங்கன்வாடியில் சாப்பிட குழந்தைகளுக்கு ஆதார் கட்டாயம்! - மத்திய அரசு

Published on 01/12/2017 | Edited on 01/12/2017
அங்கன்வாடியில் சாப்பிட குழந்தைகளுக்கு ஆதார் கட்டாயம்! - மத்திய அரசு

அங்கன்வாடி பள்ளிக்கூடங்களில் சாப்பிட குழந்தைகளுக்கு ஆதார் கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.



அங்கன்வாடி பள்ளிக்கூடங்களில் குழந்தைகள் சாப்பிட தேசிய ஊட்டச்சத்து மிஷன் அடிப்படையில் ஆதார் அவசியம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆதார் மூலமாக குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பால் கொடுக்கும் தாய்மார்களைக் கண்காணிக்கவும், அவர்களுக்கு ஊட்டச்சத்து முறையாக கிடைப்பதை உறுதி செய்யவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதன்மூலம் குழந்தைகளின் பெயரைச்சொல்லி அரசின் வளங்கள் சுரண்டப்படுவதையும், குழந்தைகளுக்கு முறையாக அரசின் வளங்களைக் கொண்டுசேர்ப்பதை உறுதி செய்வதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், அசாம் மாநிலத்தில் மட்டும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட போலியான பெயர்களைப் பயன்படுத்தி அங்கன்வாடி உணவுகள் வீணாகின்றன. இதனால், அரசுக்கு நாளொன்றுக்கு ரூ.30 லட்சம் வரை செலவாகிறது என குறிப்பிட்டுள்ளார்.

ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஆதார் இல்லை என்பதால், இந்தத் திட்டத்திற்காக வயது வரம்பை மூன்றாக குறைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. குழந்தைகள் தினமும் ஆதார் கொண்டு செல்லத் தேவையில்லை என்றும், அதைப் பராமரிக்க பணியாளர்கள் நியமிக்கப் படுவார்கள் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சார்ந்த செய்திகள்