ஆந்திரப் பிரதேச மாநிலம் கர்னூல் மாவட்டம் பட்டிகொண்டாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெகன் மோகன் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், "முன்னாள் முதல்வர் சந்திரபாபு தனது மாமனார் என்.டி.ஆர் முதுகில் குத்தி வெற்றி பெற்றார். இப்போது ராஜமுந்திரியில் மாநாடு என்ற நாடகம் உருவானது. என்.டி.ஆர் முதுகில் குத்திய சந்திரபாபு தற்போது யுகபுருஷர், ராமர் மற்றும் கிருஷ்ணர் என்று என்.டி.ஆரை புகழ்ந்து வருகிறார். சந்திரபாபு தனது பதவிக்காக யாரையும் முதுகில் குத்தவும் தயங்குவதில்லை. தெலுங்கு தேசம் கட்சியின் தேர்தல் அறிக்கையை பார்க்கும் போது ஆச்சரியமாக உள்ளது. நமது தேர்தல் அறிக்கை மக்கள் மனதில் இருந்து பிறந்தது. ஆனால் சந்திரபாபுவின் தேர்தல் அறிக்கை கர்நாடகாவில் இருந்து பிறந்தது. கூட்டணிக்காக சந்திரபாபு எந்த எல்லைக்கும் வளைந்து கொடுப்பார்.
சந்திரபாபு ஆட்சியில் ஆண்டுதோறும் வறட்சி நிலவி வந்தது. அவரது ஆட்சியில் குறைந்தபட்சம் பாதி மாவட்டங்கள் வறட்சி மண்டலங்களாக அறிவிக்கப்பட்டன. இப்போது ஆந்திராவில் வறட்சி இல்லை. மக்கள் இடம்பெயர்வும் இல்லை. முந்தைய அரசின் ஆட்சிக்கும் உங்கள் பிள்ளையின் ஆட்சிக்கும் உள்ள வித்தியாசத்தைப் மக்கள் உணர்ந்து சிந்திக்க வேண்டும்" என பேசினார்.