Published on 18/09/2019 | Edited on 18/09/2019
பிரதமர் மோடி நேற்று தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.

1950 ஆம் ஆண்டு பிறந்த பிரதமர் மோடி நேற்று தனது 69 ஆவது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடினார். பிறந்தநாளை முன்னிட்டு நாட்டு மக்கள், அரசியல்வாதிகள், உலக தலைவர்கள் என பலரும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர். அந்தவகையில் மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா வெளியிட்ட பதிவில் நாட்டின் தந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்து என்று குறிப்பிட்டிருந்தார் . இதற்கு சமூகவலைதளத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அவரது இந்த பதிவு தேச தந்தை மகாத்மா காந்தியை இழிவுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.