பாஜக மூத்த தலைவர் அமித்ஷா இன்று இந்தியாமுழுவதும் கட்சி செயல்பாடுகளுக்காக 1800 வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கியுள்ளார்.
தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் தொடர்ந்து குழந்தை கடத்தவந்ததாக பல நபர்கள் தாக்கப்பட்டு உயிரிழிந்த சம்பவம் அதிகரித்து வருகின்ற நிலையில் இதுபோன்ற பொய்யான தகவல்களை பரப்புவோரையும், தவறான செய்திகளை பரப்புவோரையும் கண்காணித்து மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு அண்மையில் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இதுபோன்ற போலியான செய்திகள் அதிகமாக வாட்ஸ் ஆப் எனப்படும் சமூக வலைதள செயலியே முக்கிய பங்காற்றுகிறது எனவே போலியான செய்திகள் பகிரப்படுவதை தடுக்க தொழிநுட்பமுறையில் வாட்ஸ்ஆப் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்நிறுவனத்திற்கு மத்திய அரசால் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. அதேபோல் பாஜக சார்பிலும் வதந்தி செய்திகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கட்சி செயல்பாடுகளை நெறிப்படுத்த வாட்ஸ் ஆப்பின் மூலம் அனைத்து மாநில தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் கட்சி பணியாளர்களை இணைக்கும் முயற்சியில் இறங்கிய பாஜக தேசிய தலைவர் அமித்ஷா முன்னதாக நாடுமுழுவதுமுள்ள கட்சி பொறுப்பாளர்களை சந்தித்து கட்சி சார்பில் போலி செய்திகள் பரப்பபடுவது மற்றும் பகிரப்படுவது தடுக்கப்பட வேண்டும் தவிர்க்கப்பட்ட வேண்டும் என அறிவுறுத்தினார். அதேநேரத்தில் வாட்ஸ் அப் செயலியை கட்சியின் முன்னற்ற அம்சங்களுக்கு பயன்படுத்தவேண்டும் எனவும் யோசனை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று தற்போது ஒரே நாளில் 1800 வாட்ஸ் ஆப் குழுக்களை அமித்ஷா உருவாக்கியுள்ளார். அந்த 1800 வாட்ஸ் அப் குழுக்களிலும் அமித்ஷா இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.