1971ஆம் ஆண்டு நடைபெற்ற போரில், தங்கள் இன்னுயிரைத் தந்த இந்திய வீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், டெல்லியில் உள்ள இந்தியா கேட் முன்பு சுடர் விட்டுக்கொண்டிருக்கும் அமர் ஜவான் ஜோதி, தேசிய போர் நினைவிடத்தில் உள்ள அணையா விளக்கில் இணைக்கப்பட இருப்பதாகவும், இந்தியா கேட் முன்புள்ள அமர் ஜவான் ஜோதி அணைக்கப்படவுள்ளதாகவும் இராணுவ அதிகாரி மூலம் வெளியான தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தகவல் குறித்து மிகுந்த வேதனையை வெளிப்படுத்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, "நமது வீரர்களுக்காக எரிந்த அணையா சுடர் இன்று அணைக்கப்படுவது மிகுந்த வேதனையை அளிக்கிறது. சிலரால் தேசபக்தி மற்றும் தியாகத்தைப் புரிந்து கொள்ள முடியாது. பரவாயில்லை நாங்கள் நமது வீரர்களுக்காக மீண்டும் அமர் ஜவான் ஜோதியை ஏற்றுவோம்" எனத் தெரிவித்தார்.
#WATCH | Delhi: Amar Jawan Jyoti flame at India Gate merged with the flame at the National War Memorial. pic.twitter.com/Nd1dnfvWYW— ANI (@ANI) January 21, 2022
இந்தச்சூழலில் இராணுவ வீரர்கள், அமர் ஜவான் ஜோதியை தேசிய போர் நினைவிடத்தில் உள்ள அணையா விளக்கில் இணைந்துள்ளனர். இதற்கிடையே, இந்தியா கேட் முன்புள்ள அமர் ஜவான் ஜோதி அணைக்கப்படாது என தகவல் வெளியாகியுள்ளது.